×

அதிக பாரம் ஆபத்து

 

சிவகாசி, மே 19: சிவகாசி பகுதியில் சரக்கு வாகனங்கள் சாலை விதியை மீறி, அளவுக்கு அதிகமாக பாரத்தை ஏற்றிக் கொண்டு செல்வது அதிகரித்து வருகிறது. இந்த வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதோடு விபத்து அபாயமும் நீடித்து வருகிறது. குறிப்பாக, சிவகாசி பகுதியில் பழைய பேப்பர் லோடுகள், தீப்பெட்டி பெட்டிகள் ஏற்றி செல்லும் மினி ஆட்டோக்கள் அளவிற்கு அதிகமாக பாரம் ஏற்றிக்கொண்டு திறந்தவெளியாகச் செல்வது தினம்தோறும் வாடிக்கையாகிவிட்டது. எனவே, விதிமுறைகளை மீறி, போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sivakasi ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது