×

நைஜீரியாவில் 20 தீவிரவாதிகள் சுட்டு கொலை

 

லாகோஸ்: நைஜீரியாவில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த 20 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜிரியா நாட்டில் அல்-கொய்தா, ஐஎஸ், போகோ ஹாரம் போன்ற தீவிரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுவும் இயங்கி வருகின்றன. இந்த கிளர்ச்சியாளர் குழுக்கள், தீவிரவாத அமைப்புகள் இரண்டுமே அவ்வப்போது பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை குறி வைத்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு நைஜீரியா ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

மேலும் இந்த தீவிரவாத அமைப்புகளை ஒடுக்கும் நடவடிக்கையில் நைஜீரியா பாதுகாப்பு படையுடன், அமெரிக்க படைகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. அதன்ஒரு பகுதியாக, நைஜீரியாவில் அமெரிக்க, நைஜீரிய படைகளின் கூட்டு தாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் 2ம் நிலை தலைவரான அபு பக்கர் அல் மைனுகி கடந்த 16ம் தேதி சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில் நைஜீரியா, அமெரிக்கா படைகள் நேற்று முன்தினம் நைஜர் மற்றும் சாட் நாடுகளுக்கிடையேயான போர்னோ மாநிலத்தில் கூட்டு தாக்குதல் நடத்தின. இதில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த 20 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

Tags : Nigeria ,Lagos ,IS ,Al-Qaeda ,Boko Haram ,West Africa ,
× RELATED அமெரிக்காவில் சாண்டியா கோவில் மசூதி அருகே துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி