×

முதல்வர் விஜயுடன் தொழில் துறை பிரதிநிதிகள் சந்திப்பு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில், இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (எப்ஐசிசிஐ) பிரதிநிதிகள் குழுவினர் முதல்வர் விஜயை சந்தித்து பேசினார்கள். அப்போது, தமிழ்நாட்டின் நீண்டகால பொருளாதார நோக்கத்திற்கிணங்க, மாநிலத்தில் தொழில் துறை வளர்ச்சி மற்றும் முதலீட்டை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. எப்ஐசிசிஐ கூட்டமைப்பால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை கவனமாக கேட்டறிந்து, அவற்றிற்கு தீர்வு காணும் வகையில் ஆவன செய்யப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், நாட்டின் முன்னணி பொருளாதார சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் நோக்கத்தை முன்னெடுத்து செல்லும் இந்த பயணத்தில், பிரதிநிதிகள் குழுவின் வழிகாட்டுதலும், பரிந்துரைகளும் தொடர்ந்திட வேண்டும் என்றும் முதல்வர் கேட்டு கொண்டார்.

இச்சந்திப்பில், எப்ஐசிசிஐ தமிழ்நாடு மாநில கவுன்சில் சேர்மன் ஜி.எஸ்.கே.வேலு, இணை தலைவர்கள் பூபேஷ் நாகராஜன், டாக்டர் அசோக் வர்கீஸ், எப்ஐசிசிஐ தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் சுதர்சன், ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்தின் வெளிவிவகாரங்கள் தலைவர் தரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : CM ,Vijay ,Chennai ,Federation of Indian Chambers of Commerce and Industry ,FICCI ,Secretariat ,Tamil Nadu ,
× RELATED சென்னை அருகே இரு கானா பாடகர்கள் 6 பேர்...