சென்னை: பல்லாவரம் ஏரியில் 5 டன் அளவுக்கு மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் பற்றி விரிவான விசாரணை நடத்த தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ கழிவைக் கொட்டிய மருத்துவமனை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. ஏரியில் 5 டன் மருத்துவக் கழிவுகளை கொட்டி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக தாமாக முன்வந்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
