- முதல் அமைச்சர்
- விஜய்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- எம். வீரபாண்டியன்
- தஞ்சாவூர்
- ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமை இயக்கம்
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- லிங்க
- மாநில செயலாளர்
- தமிழ்நாடு…
தஞ்சை: தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில குழு கூட்டம் நேற்று தஞ்சையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாநில தலைவர் லிங்கம் தலைமையில் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேசியதாவது: தமிழக மக்களின் எதிர்பார்ப்பின்படி முதல்வர் விஜய் நல்லாட்சி தர வேண்டும். ஒரு புதிய அரசு நிலை பெற அதிக நாட்கள் ஆகும். தனது கொள்கைகளில், நடைமுறைகளில் அவற்றை முன்னெடுப்பதில் காலநேரம் தேவைப்படும். இருப்பினும் மிக முக்கியமான இலாக்காக்கள் யாருக்கும் ஒதுக்கப்படாமல் உள்ளன.
இந்தியாவிலேயே நலத்திட்டங்கள் வழங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் தான். அந்த நலத்திட்டங்கள் தொடர வேண்டும். அரசை எவ்வளவு உறுதியாக ஆதரிக்கிறோமோ, அவ்வளவு உறுதியாக எளிய மக்களின் குரலை நாங்கள் ஒலிப்போம். சிலர் சொல்வது போல கம்யூனிஸ்ட்கள் ஆளும் அரசுக்கு நெருக்கடி, குடைச்சல் தருவார்கள், நிம்மதியாக விடமாட்டார்கள், நம்பக்கூடாது என்ற கருத்துகளை நாங்கள் நிராகரிக்கிறோம். எந்த சொந்த நலனும் எங்களுக்கு இல்லை. நாட்டு நலன், மக்கள் நலன் தான் முக்கியம்.
குதிரை பேரம், ஆடு பேரம் போன்ற பேரங்களில் இதுவரை கம்யூனிஸ்ட்கள் ஈடுபட்டதே இல்லை. எங்களுக்கு பேரங்கள் தெரியாது. ஜனநாயக நெறிகளுக்கு புறம்பானதை இந்திய கம்யூனிஸ்ட் ஏற்காது. முதல்வர் விஜய் பிரதமரை சந்தித்து கிடப்பில் உள்ள மாநிலங்களுக்கான நிதியை கேட்டு பெற வேண்டும். மத்திய அரசும் தடையின்றி வழங்க வேண்டும் என்றார்.
