சென்னை: தமிழ்நாட்டில் அன்றாடம் அரங்கேறும் கொலை சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். பொதுமக்களின் உயிர், உடமைகளை பாதுகாப்பதில் தவெக தோல்வியடைந்து இருப்பதாக டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். சென்னை அருகே கானா பாடகர்கள் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர், தூத்துக்குடியில் மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார், கோயில்பட்டியிலும் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று டிடிவி தினகரன் சமீபத்திய குற்ற சம்பவங்களை பட்டியலிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
