×

நிலைக் குழு கூட்டங்களில் 53% எம்பிக்கள் மட்டுமே பங்கேற்பு: உறுப்பினர்கள் வராததால் கூட்டங்கள் ஒத்திவைப்பு

 

புதுடெல்லி: மக்களவை மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ள பல்வேறு துறை சார்ந்த 16 நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் எம்பிக்களாக தேர்வு பெற்றவர்கள் பொது கணக்கு கமிட்டியிலும் இடம் பெற்றுள்ளனர். சமீப காலத்தில் போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் நாடாளுமன்ற குழுக்களின் 5 கூட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கூட்டம் நடைபெறுவதற்கு மொத்தம் 11 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். போதிய உறுப்பினர்கள் இல்லாததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு உற்பத்தித் துறையில் தன்னிறைவு குறித்து விவாதிப்பதற்காக திட்டமிடப்பட்டிருந்த, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நிலைக் குழுவின் கூட்டம், போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜனவரி 5 அன்று, போதிய எம்பிக்கள் இல்லாததால் நீர்வள துறையின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

ஏப்ரல் 22 ம் தேதி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக் குழுவின் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டது. ஏப்ரல் 10ம் தேதி நடந்த வேளாண்மை தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் 12 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 16 நிலைக்குழுகளின் கூட்டங்களில் சராசரியாக 47 சதவீத உறுப்பினர்கள் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கின்றனர் என்பது தரவுகள் மூலம் தெரியவருகிறது.

Tags : New Delhi ,Lok Sabha ,Rajya Sabha ,Public Accounts Committee ,
× RELATED டெல்லி மெட்ரோவில் கூடுதல் ரயில்கள்...