- விஜய்
- ராஜேந்திர பாலாஜி
- விருதுநகர்
- அதிமுக மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
- அமைச்சர்
- கே. டி ராஜேந்திர பாலாஜி
- தவேகா
விருதுநகர்: விருதுநகரில் அதிமுக மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்து முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: இந்த வெற்றி தவெகவிற்கு நிலையானதல்ல. தவெக தலைவர் விஜய் ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக இல்லாமல் வந்திருக்கிறார். ஒரு நட்சத்திர நடிகர் என்ற மாயையில் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். வேட்பாளர் யார் என்று தெரியாமலேயே வாக்குகள் தவெகவிற்கு கிடைத்திருக்கின்றன.
விஜய் கட்சிக்கு வாக்களித்தவர்கள் மனம் வருந்தும் செயல்களை பார்க்க முடிகிறது. அதிமுகவை மக்கள் கைவிட மாட்டார்கள். விஜய் வாங்கிய வாக்குகள் அனைத்தும் அதிமுக வாக்குகளே. திமுக வாக்குகள் அப்படியே அவர்களுக்கே கிடைத்துள்ளது. அதிமுக மற்றும் பாஜக வாக்குகள் விஜய் கட்சிக்கு சென்றது கால சூழ்நிலை. இவ்வாறு அவர் பேசினார்.
