×

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கேலி எதிரொலி; விஜய்யுடன் என்னை ஒப்பிட வேண்டாம்: ஆந்திர துணை முதல்வர் காட்டம்

 

ஐதராபாத்: தயவுசெய்து விஜய்யுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் கூறினார். தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக போட்டியிட்டு சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. விஜய் முதல்வராகவும் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், பக்கத்து மாநிலமான ஆந்திராவின் துணை முதல்வரான நடிகர் பவன் கல்யாணை அம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் கடுமையாக கேலி செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் விஜய் முதல் முயற்சியிலேயே முதல்வர் ஆகிவிட்டார் என்றும், ஆனால் நீங்கள் இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டும் வெறும் துணை முதல்வர் மட்டுமே ஆகியுள்ளீர்கள் என்றும் அவர்கள் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். இதற்கு மங்களகிரியில் நேற்று நடந்த ஜனசேனா கட்சி கூட்டத்தில் பவன் கல்யாண் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசுகையில், ‘என்னுடைய அரசியல் பயணத்தை தமிழக தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகியுள்ள தவெக தலைவர் விஜய்யுடன் தயவுசெய்து ஒப்பிட வேண்டாம்.

இரு மாநிலங்களின் அரசியல் சூழ்நிலைகளும் முற்றிலும் மாறுபட்டவை. நான் கட்சியை தொடங்கியபோது பல்வேறு சவால்களை சந்தித்தேன். அனைவரும் கட்சியை விட்டுச் சென்றபோதும், தனி ஆளாக நின்று கட்சியை வளர்த்தெடுத்தேன். முதல்வர் நாற்காலிக்காகவோ அல்லது பதவிகளுக்காகவோ நான் இந்த கட்சியை உருவாக்கவில்லை. மக்களுக்கு ஒரு மாற்று அரசியல் தளம் தேவை என்ற நோக்கத்திலேயே எனது பயணத்தை தொடங்கினேன்’ என்று கூறினார்.

Tags : YSR Congress ,Vijay ,Andhra Deputy Chief Minister ,Kattam ,Hyderabad ,Pawan Kalyan ,Tamil Nadu Victory Party ,Tamil Nadu assembly elections ,
× RELATED கேரளாவில் 10ம் வகுப்பு தேர்வில் 99.07 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி