×

துணிச்சலான செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு ஒன்றிய அரசின் வீரதீர விருது

அரியலூர், மே 16: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் வாயிலாக பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்படுகின்றது. இவ்விருது தன்னலமற்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட்ட திறமையான குழந்தைகளின் திறமைகளை பாராட்டி அங்கீகாரம் அளிப்பதினை நோக்கமாக கொண்டு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் விளையாட்டு, சமூகசேவை, அறிவியல், தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் சமூகத்தில் பரவலான மற்றும் வெளிப்படையான தாக்கத்தை ஏற்ப்படுத்திய குழந்தைகளுக்கு இவ்விருது அளிக்கப்படுகின்றது. மேலும், இந்த விருதினை பெறுவதற்கு இந்திய குடிமகனாக மற்றும் இந்தியாவில் வசிக்கும் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பத்தினை https://awards.gov.in என்ற ஆன்லைன் போர்ட்டலில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இவ்விருதுக்கான விண்ணப்பத்தினை குழந்தையோ அல்லது குழந்தையை சார்ந்த பெற்றோர், ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் பரிந்துரைக்கலாம். 2026ம் ஆண்டிற்கிற்கான விண்ணப்பத்தினை எதிர்வரும் 31.07.2026க்குள் பதிவு செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags : Ariyalur ,District ,Collector ,Rathinasamy ,Mantri ,Rashtriya Pal Puraskar ,Ministry of Women and Child Development, Government of India ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது