×

முத்துப்பேட்டை குடியிருப்பு பகுதியில் புகுந்து ஒரு வாரமாக மக்களை அச்சுறுத்தி வரும் காட்டெருமை: தேடும் பணியில் வனத்துறை

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த காரைதிடல் பகுதியில் கடந்த 9ந்தேதி வன பகுதியிலிருந்து தப்பி வந்த மிகப்பெரிய காட்டெருமை ஒன்று அங்குள்ள குடியிருப்பு பகுதில் சென்று மக்களை அச்சுறுத்தியது இதனை கண்ட மக்கள் ஓட்டம் பிடித்தனர்.

அதன்பின்னர் அந்த காட்டெருமை தேவதானம், செந்தாமரைகண் சித்தமல்லி, புத்தகரம் பின்னர் காரைதிடல் பகுதி குடியிருப்பு பகுதியில் புகுந்து மக்களை துரத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டது. அங்குள்ள மக்கள் ஒன்றுக்கூடி வெடி வைத்து விரட்டி விட்டதில் கிழக்கு கடற்கரை சாலையை கடந்து இரு தினங்களுக்கு முன்பு ஜாம்புவானோடை கிராம பகுதிக்கு வந்து மக்களை தற்போது அச்சுறுத்தி வருகிறது.

இதில் தனியார் ஒருவருக்கு சொந்தமான சுமார் ஆயிரம் ஏக்கர் அளவில் உள்ள ஒரு தென்னந்தோப்புக்குள் புகுந்த அந்த காட்டெருமை அங்கேயே முகாமிட்டு உள்ளதுடன் இடைடையே குடியிருப்பு பகுதிக்கு வந்து மக்களை மக்களை அச்சுறுத்தி விட்டு மீண்டும் அதே தென்னந்தோப்புக்குள் புகுந்து வருகிறது.

இதனை வனத்துறையால் பிடிக்க முடியவில்லை இதனால் இப்பகுதி மக்கள் என்ன செய்வது என்று திக்குத்தெரியாமல் தவித்து குழந்தைகளை வைத்துக்கொண்டு வீட்டில் முடங்கி இரவிலும் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

Tags : Muthuppet ,Karaitidal ,Thiruvarur district ,9indeti ,
× RELATED நாகப்பட்டினம் அருகே 2 கிலோ மீட்டர்...