×

நாகப்பட்டினம் அருகே 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் 150-க்கும் மேற்பட்ட லாரிகள்

நாகப்பட்டினம்: புத்தூர் நாகூர் அருகே 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெல் மூட்டைகளுடன் 150-க்கும் மேற்பட்ட லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன. இன்றைக்கு மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேலாக இதே நிலை நீடிப்பதாக விவசாயிகள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நெல் ஏற்றுமதி பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அப்பகுதியில் அதிக விபத்துகள் ஏற்படக்கூடிய நிலை உள்ளது.

கடந்த 8ம் தேதி வரை நெல் மூட்டைகள் வெளி மாவட்டங்களுக்கு ரயில்கள் மூலமாக அனுப்பப்பட்டது. கடந்த 8ம் தேதியில் இருந்து லாரிகள் மூலமாக நாகப்பட்டினத்தில் இருந்து வெளி மாவட்ட மில்களுக்கு அனுப்பக் கூடிய நெல் முட்டைகளை ஏற்றுமதி செய்யபடாமல் நிறுத்தப்பட்டுள்ளது

குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அதிகாரியிடம் விவசாயிகள் புகார் அளித்தாலும் எந்த ஒரு நடவடிக்கை எடுப்பது இல்லையென்றும், கோவில்பட்டி பகுதியில் இருக்க கூடிய மிக பெரிய மில்லில் நெல் மூட்டைகளை ஊழியர்கள் சரியாக கையாளுவது கிடையாது. இப்படி அணிவகுத்து நிற்கும் லாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nagapattinam ,Puttur Nagore ,
× RELATED திடீரென மாறிய வானிலை: இருள் சூழ்ந்து காணப்படும் செங்கல்பட்டு