×

பெண்ணுக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

 

திருவொற்றியூர், மே 15: எர்ணாவூர், பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சந்திரா. கடந்த 2018ம் ஆண்டு சந்திராவுக்கு, அதே பகுதியை சேர்ந்த டேவிட் (39) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, செல்போன் மூலம் ஆபாச மெசேஜ் அனுப்பி உள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த சந்திரா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுபற்றி அறிந்த அவரது கணவர் செந்தில்குமார், எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, டேவிட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருவொற்றியூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதி, சந்திராவிற்கு பாலியல் துன்புறுத்தல் செய்த டேவிட்டுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags : Thiruvottriyur ,Senthilkumar ,Brindavan Nagar, Ernavur ,Chandra ,David ,
× RELATED இரு தரப்பினர் மோதல்