×

கழிவுநீர் குழாய் இணைப்பு பணி மயிலாப்பூர், மந்தைவெளி உந்து நிலையங்கள் மூடல்

 

சென்னை, மே 12: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், தேனாம்பேட்டை மண்டலம், ராமகிருஷ்ணா மடம் சாலையில் (மந்தைவெளி பேருந்து பணிமனை அருகில்) பிரதான கழிவுநீர் குழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை (12 மணி நேரம்) மண்டலம் -9க்குட்பட்ட தெற்கு மயிலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையம், சீதாம்மாள் காலனி கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் மந்தைவெளிப்பாக்கம் கழிவுநீர் உந்து நிலையம் தற்காலிகமாக செயல்படாது.
எனவே, தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட ஆழ்வார்பேட்டை, நந்தனம், அபிராமபுரம், ராஜா அண்ணாமலைபுரம், மயிலாப்பூர், சாந்தோம், மந்தைவெளி ஆகிய இடங்களில் கழிவுநீர் தொடர்பான புகார்களுக்கு 8144930909 8144930225 கீழ்க்காணும் பகுதி அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Mylapore ,Mandavili ,Chennai ,Chennai Water Supply Board ,Chennai Metro Rail Corporation ,Ramakrishna Math Road ,Mandavili Bus Station ,Teynampet ,
× RELATED காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை