×

சரித்திர பதிவேடு ரவுடிகள் சிக்கினர்

 

பெரம்பூர், மே 12: பெரம்பூர் பேரக்ஸ் ரோடு போகி பாளையத்தை சேர்ந்த பெரோஸ் கான் (30), நேற்று வியாசர்பாடி கூட்ஸ் ஷெட் உள்ளே தனது நண்பர் சீனி என்பவரை பார்க்க சென்றார். அப்போது அங்கிருந்த தோல் அஜய் மற்றும் சஞ்சய் ஆகியோர் வீண் தகராறில் ஈடுபட்டனர். சஞ்சய் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெரோஸ் கானை ஓங்கி வெட்டினார். இதில் அவருக்கு வலது கை பகுதியில் பலத் காயம் விழுந்தது. அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து வியாசர்பாடி சாமந்தி பூ காலனியை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடிகளான அஜய் (எ) தோல் அஜய் (22), சஞ்சய் (20) ஆகியோரை கைது செய்தனர்.

Tags : Perampur ,Beroz Khan ,Barracks Road Bogie Camp ,Cini ,Vyasarpadi Goods ,Shed ,Dhol Ajay ,Sanjay ,
× RELATED காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை