சென்னை: அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த தலைவர் சி.வி. சண்முகம் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
