×

அனுமதியின்றி புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

தா.பழூர், மே. 14: அனுமதி இன்றி புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணவாளன் தலைமையிலான காவல்துறையினர் முத்துவாஞ்சேரி பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, முத்துவாஞ்சேரி கிராமம் அண்ணா நகரை சேர்ந்த புகழ் என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அவரது பெட்டிகடையில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்பு வழக்கு பதிவு செய்து புகழை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Tha.Pazhur ,Ariyalur district ,Vikramangalam Police ,Sub ,Inspector ,Manavalan ,Muthuvanchery ,
× RELATED சுடுகாட்டில் கஞ்சா விற்றவர் கைது