- நெடுஞ்சாலைகள் துறை
- செந்துறை
- அரியலூர்
- அரியலூர் -
- Jayankondam
- செந்துறை வழித்தடம்
- அரியலூர் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவு
- செந்துரை மாநிலம்…
அரியலூர், மே 13: அரியலூர்- ஜெயங்கொண்டம்(வழி) செந்துறை வழித்தடத்தில், அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு சார்பில் நடைபெற்று வரும் நான்கு வழிச் சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். அரியலூர் – ஜெயங்கொண்டம் (வழி) செந்துறை மாநில நெடுஞ்சாலையை இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளர் ராஜதுரை தலைமையில், கோட்டப் பொறியாளர் CMDP – 1 ராஜகணபதி, அரியலூர் கோட்டப் பொறியாளர் வடிவேல் மற்றும் உதவிக் கோட்டப் பொறியாளர்கள் , உதவிப் பொறியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று தள ஆய்வு மேற்கொண்டு, சாலையின் தரம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினர்.
