கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பல்வேறு நகராட்சிகளில் நடந்த பணி நியமனங்களில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. தகுதியற்றவர்களுக்குப் பணம் பெற்றுக்கொண்டு வேலை வழங்கப்பட்டது குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திரிணாமுல் முன்னாள் அமைச்சர் சுஜித் போஸ் நேற்று நேரில் ஆஜரானார். அவரிடம் பல மணி நேரமாக விசாரணை நடந்தது. அவர் அளித்த தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால், விசாரணை முடிவில் அமலாக்கத்துறை அவரை அதிரடியாக கைது செய்தது.
