டெல்லி: இந்திய அரசிடம் 60 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெயும் 45 நாட்களுக்கு தேவையான LPG எரிவாயுவும் கையிருப்பு உள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல் தெரிவித்துள்ளார். பெட்ரோல்-டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி பேசியது மக்களிடையே பீதியை கிளப்பிய நிலையில், ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.
