×

நடுவருடன் வாக்குவாதம் ஆண்டி பிளவருக்கு அபராதம்

ராய்ப்பூர்: மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பதிவு செய்தது. அப்போட்டியின்போது, பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி பிளவர், 4வது நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆண்டி பிளவருக்கு அவரது கட்டண தொகையில் 15 சதவீதத்தை அபராதமாக ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ளது. இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ஐபிஎல் நடத்தை விதிகள் 2.3ஐ மீறியதற்காக ஆண்டி பிளவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.

Tags : Andy Flower ,Raipur ,Royal Challengers ,Bangalore ,Mumbai ,IPL ,
× RELATED ஐபிஎல்: டெல்லி அணிக்கு எதிரான...