×

அரசியலில் புதிய பண்பாட்டை துவக்கி வைத்துள்ள முதலமைச்சர் விஜய்க்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

சென்னை: அரசியலில் புதிய பண்பாட்டை துவக்கி வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில்; ‘தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், முன்னாள் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ உள்ளிட்ட மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.

முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களையும் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற நிலையில் ஒருவரையொருவர் சந்தித்து பேச முடியாத நிலையை மாற்றி, தமிழக பண்பாட்டையும், மரபையும் மீட்கும் வகையில் அனைத்து கட்சி தலைவர்களையும் முதலமைச்சர் விஜய் சந்தித்து வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Communist Party of India ,Chief Minister ,Vijay ,Chennai ,Tamil Nadu ,Chief Minister of ,Tamil Nadu Victory Corporation ,C. Joseph Vijay ,
× RELATED அரியானா, மகாராஷ்டிரா, பீகார்,...