சென்னை: தெற்கு ரயில்வே கூறியிருப்பதாவது: கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06045) மே 15, 22, 29, ஜூன் 5 ஆகிய நாட்களில் வெள்ளிக்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து நள்ளிரவு 11.50 மணிக்கு புறப்பட்டு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு 10.25 மணிக்கு வந்தடையும். பின்னர் 10.30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு 11.40 மணிக்கும் நண்பகல் 1 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.
மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி – எழும்பூர் அதிவிரைவு ரயில் (வண்டி எண்:06046) மே 17, 24, 31, ஜூன் 7 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் கன்னியாகுமரியில் இருந்து நள்ளிரவு 11.25 மணிக்கு புறப்பட்டு 12.55 மணிக்கு நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் வந்தடையும். பின்னர் 1 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு காலை 10.15 மணிக்கும், சென்னை எழும்பூருக்கு நண்பகல் 11.30 மணிக்கும் சென்றடையும். இந்த 2 ரயில்களும் 4 சேவைகள் இயக்கப்படுகிறது.
இந்த ரயில்களில் இரண்டு அடுக்கு மற்றும் மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள் – தலா 2, 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுள்ள பெட்டிகள், 3 பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இதற்கு முன்பதிவு இன்று (10ம் தேதி) காலை 8 மணிக்கு துவங்குகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
