×

தவெக ஆட்சி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் காங்கிரசில் இருந்து விலகல்

 

தூத்துக்குடி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தல் முடிவில் யாருக்கும் தனி பெரும்பாண்மை கிடைக்காத நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாநகராட்சி 34வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி தனது கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், திமுக கூட்டணி சார்பில் 2 முறையும், காங்கிரஸ் சார்பில் தனித்து போட்டியிட்டு 3 முறையும் என தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று, தற்போதும் மாமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறேன்.
கட்சியில் பொதுக்குழு உறுப்பினராகவும், மாநகராட்சி காங்கிரஸ் கொறடாவாகவும் பொறுப்பு வகித்து வருகிறேன்.

தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கு பின்பு, காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலிருந்து விலகி, தவெக ஆட்சி அமைப்பதற்காக ஆதரவு தெரிவித்தது உள்பட காங்கிரஸ் கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள முடியாமலும், கட்சியை ராகுல்காந்தி தவறாக வழிநடத்துவதாலும், மாநகராட்சி கவுன்சிலர் பதவியைத் தவிர, அனைத்து கட்சி பதவிகளையும் ராஜினாமா செய்கிறேன்

Tags : Thoothukudi Corporation Councilor ,Congress ,Tevaga government ,Thoothukudi ,Tamil Nadu Assembly elections ,DMK ,Congress party ,Tamil Nadu Victory Party ,Vijay ,
× RELATED ‘என்னை மீறி ஒருத்தன் இறங்கினா...