×

மண்ணச்சநல்லூர் அருகே உளுந்தங்குடியில் குடிநீர் தட்டுப்பாடு

 

சமயபுரம், மே 9: மண்ணச்சநல்லூர் அருகே உளுந்தங்குடி கிராமத்தில் உள்ள வடக்கி தெரு பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வீடு வாரியாக குடிநீர் இணைப்பு இல்லாத காரணத்தினால் தெருவில் இருக்கும் பொது குடிநீர் குழாயில் குடிநீர் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கோடைக்காலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு என்பது தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் ஒரு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது

 

Tags : Ulundangudi ,Manchanallur ,Samayapuram ,North Street ,Mannachanallur ,
× RELATED லால்குடி அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 595 காளைகள்