×

உயிரிழப்பிற்கு தர்பூசணி பழத்தில் கலந்திருந்த எலி மருந்து விஷமே காரணம்: உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தகவல்

மும்பை: மும்பையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தர்பூசணி பழத்தில் கலந்திருந்த எலி மருந்து விஷமே காரணம் என உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உண்ட தர்பூசணி பழத்தில் எலி மருந்து இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. மும்பையை சேர்ந்த அப்துல்லா தொகாடியா என்பவரும் அவரது மனைவி மற்றும் இரு மகள்களும் பிரியாணிக்கு பிறகு தர்பூசணி உட்கொண்டுள்ளனர். தொடர்ந்த நால்வரும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் அவர்கள் உண்ட தர்பூசணி பழத்தில் துத்தநாக பாஸ்பைடு இருந்தது தடையவியல் அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதில் எலி மருந்தில் பொதுவாக காணப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது. தர்பூசணி வெட்டி அதன் மேல் எலிமருந்து தூவி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எலி மருந்தை யாராவது வைத்தார்களா, இல்லை இவர்கள் எலி மருந்தை தர்பூசணியில் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்கு ஏதேனும் கடன் தொல்லையா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : MUMBAI ,Maharashtra ,
× RELATED மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதி...