- தவெகாவா
- திருச்சி
- காங்கிரஸ்
- கிறிஸ்டோபர் தில
- திருச்சி விமான நிலையம்
- டவேக்
- பாஜக
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தாவா
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் இன்று அளித்த பேட்டி: தமிழகத்தில் பாஜக காலூன்ற இடம் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு என்ற முடிவை எடுத்துள்ளோம். காங்கிரஸ் சேர்ந்ததால் தவெகவுக்குள் பாஜகவால் நுழைய முடியாது. பாஜகவை எதிர்த்து விஜய் ஏன் பேசவில்லையென அவரிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் தவெகவை நம்பவில்லை. அதே நேரத்தில் பாஜகவுக்கு எதிராக மக்கள் தவெகவுக்கு வாக்களித்துள்ளதால் காங்கிரஸ் தவெகவுடன் சேர்ந்துள்ளது.
தமிழகத்தில் பாஜக காலூன்றி விடக்கூடாது என்பதற்காக தான் மு.க.ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளாக அரசியல் செய்தார். அதேபோன்று தான் காங்கிரசும் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்குள் ஏதேனும் குழப்பங்களை ஏற்படுத்தலாமா என பாஜக முயற்சித்து வரும் நிலையில் அதை முறியடிக்கும் விதமாக தான் காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது என்றார்.
