சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ. 1,13,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், எப்போதும் தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கம். அந்த வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், உலகப் பொருளாதாரத்தை புதிய பாதையில் தள்ளியுள்ளது. இதனால் சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
இதனையடுத்து, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று முன்தினம் அதிரடியாக குறைந்தது. அதன்படி, தங்கம் கிராமுக்கு 180 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,820-க்கும் சவரனுக்கு 1,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 265 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,840 உயர்ந்து ரூ. 1, 12,400க்கு விற்கப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,050க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.275-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,75,000-க்கும் விற்பனையானது. இதனையடுத்து இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,13,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் 14,150க்கு விற்கப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.275க்கு விற்பனை ஆகிறது.
