×

மும்பையில் ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்..!!

மும்பை: கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் (Nairobi) இருந்து வந்த விமானம் ஒன்று நேற்று மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதையடுத்து, அந்த விமானத்தில் வந்திறங்கிய தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் (Johannesburg) நகரை சேர்ந்த ஜெஸ்ரீல் லுவோடா என்ற பயணியை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் அவர் உடைமைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்த 1,426 கிராம் கொக்கைன் (Cocaine) என்ற போதைப்பொருளை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.7 கோடி ஆகும். இதையடுத்து ஜெஸ்ரீல் லுவோடாவை அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும் இது தொடர்பாக தென் மும்பையின் நாக்பாடா பகுதியைச் சேர்ந்த இவர், இந்த கடத்தல் தொடர்பில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மும்பை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Mumbai ,Kenya ,Nairobi ,Mumbai airport ,Jezreel Luoda ,Johannesburg, South Africa ,
× RELATED பரிசோதனை முதல் சிகிச்சை வரை...