துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். விக்ஸித் பாரதம் என்ற நமது கூட்டு கனவை வலுப்படுத்த அவர் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். நமது நாடாளுமன்ற நடவடிக்கைகளின் செயல்திறனையும், பயனுடைமையையும் மேம்படுத்துவதற்கான அவரது தொடர்ச்சியான முயற்சிகள், ஜனநாயக விழுமியங்களின் மீதான அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்கள் மீதான அக்கறையுடன், அனைத்துத் துறை வளர்ச்சிக்கான அவரது அசைக்க முடியாத பேரார்வமும் அதே அளவு ஊக்கமளிக்கிறது. அவரது பொது வாழ்க்கை, அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் தெளிவான குறிக்கோளால் தொடர்ந்து வழிநடத்தப்படுகிறது. அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், தேச சேவையில் நீண்ட ஆயுளுடனும் வாழ நான் பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
