×

ஏசி பெட்டியில் அமர வைப்பதாக கூறி ஆந்திராவில் ஓடும் ரயிலில் இளம்பெண் பலாத்காரம்: ரயில்வே ஊழியர் கைது

திருமலை: ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண், பணியின் காரணமாக சில மாதங்களாக விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 24ம் தேதி இரவு வேலைக்காக விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இளம்பெண் பயணம் செய்தார்.

இளம்பெண் பயணம் செய்த பொதுப்பெட்டியில் யாரும் இல்லாத நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இளம்பெண்ணை ஏசி பெட்டியில் அமர வைப்பதாக கூறி, உதவுவது போல் நடித்து அழைத்து சென்றுள்ளார். அந்த ஏசி பெட்டியில் யாரும் இல்லாத நிலையில், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர் விஜயவாடா ரயில்வே மண்டலத்தில் ஒப்பந்த நிறுவனம் மூலம் ரயிலில் ஏ.சி.பெட்டி பராமரிப்பு ஊழியராக பணிபுரியும் சவுரவ் பக்தி என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Andhra Pradesh ,Tirumala ,Palnadu district, Andhra Pradesh ,Visakhapatnam ,Express ,
× RELATED பெங்களூரு அரசு மருத்துவமனை...