×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* முட்டைக்கோஸை துருவி, நன்றாக வதக்கி, மிளகாய், உப்பு, புளியுடன் சேர்த்து அரைத்தால் சுவையான கோசு துவையல் ரெடி.

* சூப் செய்யும் போது ஒரு துண்டு வெங்காயம், சிறிது கடுகை நெய்யில் வறுத்து சேர்த்துக் ெகாள்ள சூப் வாசனையுடன் இருக்கும்.

* தயிர் சாதத்துக்கு கடுகு தாளித்து கொட்டுவதற்கு பதிலாக ஓமத்தை தாளித்துக் கொட்டினால் வாசனையாகவும், புதுவித சுவையோடும் இருக்கும்.

கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

* அல்வா பதம் தவறிவிட்டதா? சோளமாவை சிறிது கரைத்து கலவையில் விட கெட்டி கூடும்.

* சூப்பில் போட பிரெட் துண்டுகள் இல்லாத ேபாது ஜவ்வரிசி வடாகம் பொரித்து, உடைத்து துண்டுகளாக்கி சூப்பில் சேர்த்தால் சுவையும், மணமும் கூடும்.

க.நாகமுத்து, திண்டுக்கல்.

* பருப்பு பாயசம் செய்யும் போது ஒரு டம்ளர் பயத்தம் பருப்பிற்கு 2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு குக்கரில் வேகவைக்க வேண்டும். பிறகு 1 டீஸ்பூன் பச்சரிசி, 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவலை அரைத்து பாசிப்பருப்பு வெந்தவுடன் அதில் கடலைப்பருப்பு அரைத்த விழுதைப் போட்டு ஒரு கொதி வந்தவுடன் வெல்லம் சேர்த்து வெல்ல வாசனை நீங்கியவுடன் அடுப்பிலிருந்து இறக்கி வைக்க வேண்டும். தேங்காய் துருவி நெய்யில் வறுத்து சேர்க்க சுவை அள்ளும்.

* பாயசம் செய்யும் போது சேமியா, ரவை சேர்க்கலாம். சேமியா ஜவ்வரிசி சேர்க்கலாம். வெல்லத்துடன் சர்க்கரையும் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

* எலுமிச்சை சாதத்திற்கு உப்பை எலுமிச்சை சாற்றில் கலந்து பிறகு எண்ணெயில் கடுகு, பருப்பு வகைகள், பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளித்து அதிலேயே மஞ்சள் ெபாடி சேர்த்து சாதத்தில் கலந்தால் கசப்பும் தெரியாது. பெருங்காய பொடி கடைசியாக ேசர்க்க வேண்டும்.

ராஜேஸ்வரி, சென்னை.

* பால் அல்வா செய்யும் போது கோக்கோ பவுடர் சேர்த்து சாக்லேட் பால் அல்வா தயாரிக்கலாம்.

* அல்வா கலவையை மிகவும் கெட்டியாக வரும் வரை வைக்கக் கூடாது. அடைமாவு பதத்தில் எடுத்தால் ஆறும் பொழுது சரியாக இருக்கும்.

* பனீரை லேசாக பொரித்து தண்ணீர் அல்லது தயிரில் ஊற விட்டு மசாலா கொதித்தவுடன் சேர்க்க வேண்டும்.

* வடை செய்யும் போது மாவில் தண்ணீர் அதிகமாக இருந்தால் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் ேசர்க்க வேண்டும்.

– ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.

* குழம்பு வைக்கும் போது முதலில் வெங்காயம், காய்கறிகளை வதக்கிய பின், தக்காளி வதக்கி, குழம்பு வைத்தால் குழம்பு ருசியாக இருக்கும்.

* சேனைக்கிழங்கை வேக வைக்கும் முன் ஒரு வெறும் பாத்திரத்தில் உப்பு போட்டு நீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கைப் போடவும். விரைவில் பதமாக வெந்து விடும்.

* இட்லி வைக்கும் பாத்திரத்தில் சுடுநீரில் காய்ந்த கறிவேப்பிலையை போட்டு இட்லியை வார்த்தால், இட்லி பிரமாதமாக இருக்கும்.

– வாசுகி, சென்னை.

Tags : Kumkumam ,
× RELATED சமூக மாற்றத்திற்கான ஒரு இளம்பெண்ணின் குரல்!