×

பைக் மீது ஆட்டோ மோதி இருவர் காயம்

பாலக்காடு, ஏப்.30: பாலக்காடு அருகே காடாம்கோடு சர்வீஸ் சாலையில் குடிபோதையில் ஆட்டோ டிரைவர் ஆட்டோவை இயக்கி, பைக் மீது மோதி விபத்து விபத்துக்குள்ளானதில் இரண்டு வாலிபர்கள் படுகாயமடைந்தனர். ஆட்டோ டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 27ம் தேதி இரவு பாலக்காடு அருகே காடாம்கோடு சர்வீஸ் சாலையில் ஆட்டோ டிரைவர் சிவதாசன் மது போதையில் ஆட்டோ ஒட்டி வந்துள்ளார். அப்போது எதிராக காடாம்கோட்டிலிருந்து பாலக்காடு நோக்கி சென்ற பைக் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காடாம்கோட்டைச் சேர்ந்த ஜிதேஷ் (25), ரஞ்ஜித் (27) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த பாலக்காடு டவுன் சவுத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மது போதையில் ஆட்டோ ஓட்டிய கொடும்பு கரிங்கரப்புள்ளி அய்யப்பன்காவு பகுதியைச் சேர்ந்த சிவதாசனை (60) கைது செய்தனர்.

 

Tags : Palakkad ,Kadamkodu ,Palakkad… ,
× RELATED தடுப்பு சுவரில் பைக் மோதி வாலிபர் பலி