- கோயம்புத்தூர்
- அஜித் குமார்
- கே. வெங்கடேசபுரம்
- கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்
- ராம்நகர், கோயம்புத்தூர்
- சதி சாலை
- சிஎம்எஸ் பள்ளி…
கோவை, ஏப். 30: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கே.வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (27). இவர் கோவை ராம் நகரில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி அஜித்குமார் பைக்கில் சத்தி ரோடு, சிஎம்எஸ் பள்ளி எதிரே சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி சாலை தடுப்பு சுவரில் மோதினார். இதில், அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
