×

சிறைவாசிகளுக்கு சட்ட விழிப்புணர்வு

கோவை, ஏப். 23: கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி ரமேஷ் நேற்று பொள்ளாச்சி துணை சிறைச்சாலைக்கு சென்று சிறைவாசிகளிடம் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது சிறைவாசிகளுக்கு தேவையான வசதிகள் உரிய முறையில் வழங்கப்படுகிறதா?, அடிப்படை வசதிகளான தங்குமிடம், குளியலறை, சமையல் கூடம், உணவின் தரம் மற்றும் இல்லத்தில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள உரிய வசதிகள் செய்யபட்டுள்ளதா? எனவும், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் உரிய சட்ட உதவிகள் வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

உடன் பொள்ளாச்சி துணை சிறை கண்காணிப்பாளர் மாரிமுத்து, சட்ட உதவி வழக்கறிஞர் பிரபு அம்பேத்கர் மற்றும் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் இருந்தனர். இதனைத்தொடர்ந்து அவர் கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரில் அமைந்துள்ள திறந்தவெளி சிறைச்சாலைக்கு சென்று அங்கு உள்ள சிறைவாசிகளிடம் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அவர் தண்டனை சிறைவாசிகளுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் செய்யப்பட்டு வரும் சட்ட உதவிகள் பற்றி எடுத்துரைத்தார்.

 

Tags : Coimbatore ,Coimbatore District Legal Services Commission ,Associate ,Judge ,Ramesh ,Pollachi Sub-Jail ,
× RELATED ஆபத்தான நிலையில் பஸ் நிலைய மேற்கூரை