கோவை: அதிமுக ஆட்சியிலும் டெண்டரில் ஒரே விலையை பலர் கொடுத்து உள்ளனர். டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் 1987ல் இருந்தே ஒரே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது என்று ஆதாரத்துடன் பட்டியலிட்டு செந்தில்பாலாஜி விளக்கமளித்து உள்ளார். தமிழ்நாடு மின்சாரத்துறை முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளருமான செந்தில் பாலாஜி கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2021ம் ஆண்டுக்கு பிறகு, தமிழ்நாடு மின்சார வாரியத்தில், டிரான்ஸ்பார்மர் கொள்முதல் தொடர்பாக முறைகேடு நடந்ததாக ஒரு அமைப்பு புகார் அளித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது. டிரான்ஸ்பார்மர் கொள்முதல் நடைமுறை 1987-ம் ஆண்டிலிருந்தே ஒரே மாதிரியாக நடைபெற்று வருகிறது.
டெண்டர்களில் பல நிறுவனங்கள் பங்கேற்பது வழக்கம். அதில், சிலர் ஒரே தொகையை குறிப்பிடுவார்கள். எல்1, எல்2, எல்3 ஆகியவற்றில் இது இயல்பான ஒன்றாகும். ஒரு டெண்டர் கோட் செய்யும்போது 20 முதல் 30 பேர் அந்த டெண்டரில் பங்கேற்பார்கள். சிலர் எல்1 ெதாகையில் கோட் பண்ணுவாங்க, ஒரே மாதிரியான தொகையாக இருக்கும். சிலர் எல்2, எல்-3யிலும் ஒரே மாதிரியான தொகையை குறிப்பிடுவார்கள். அந்த வகையில் கடந்த 1987-ல் ஒரு டெண்டரில் 2 பேர் எல்-1 ஒரே தொகை கோட் செய்தார்கள். அதே 1987-ல் திரும்ப 3 பேர் ஒரே மாதிரி கோட் செய்தார்கள். 2006-ல் எல்1 ஒருவர் என்றால், எல்-2 23 பேர், ஒரே தொகையை கோட் பண்ணிருக்காங்க.
எல்3-ல் 18 பேர் ஒரே தொகையை கோட் பண்ணிருக்காங்க. 2011-12-ல் 209 நபர்கள் டெண்டரில் பங்கேற்றனர். இதில், எல்3-ல் 17 பேர் ஒரே தொகையை கோட் பண்ணிருக்காங்க. அப்படி 2011-2012-ல் ஆரம்பிச்சு, 2013-2014ல் 13 பேர் வரிசையாக இப்ப வரைக்கும் கிட்டத்தட்ட 30 டெண்டர்க்கு மேல் போடப்பட்டதில், 2016-2017-ல் (அதிமுக ஆட்சியில்) 17 பேர் ஒரு டெண்டர் பங்கேற்றனர். அதில், 4 பேரு ஒரே தொகையை கோட் பண்றாங்க, 11 பேரு எல்2-வ ஒரே தொகையை கோட் பண்றாங்க. அதே 2016-2017-ல் ஒருத்தர் எல்1, எல்-2வில் 18 பேர், எல்3-ல் 6 பேர், அதே 2016-2017-ல் 21 பேர் கலந்துகிட்ட டெண்டரில், எல்1 ஒருத்தர், எல்-2 ஒருத்தர், எல்-3 17 பேர்,
அதே 2016-2017-ல் எல்1 ஒருத்தர், எல்2 ஒருத்தர், எல்3-ல் 31 பேரும், மற்றொரு 2016-2017 டெண்டரில் 5 பேர் எல்1, 29 பேர் எல்2, 2017-2018-ல் 28 பேர் பங்கேற்றத்தில், 5 பேர் எல்1, 6 பேர் எல்2, ஒருத்தர் எல்3, 2019-2020ல் 12 பேர் எல்2, ஒருத்தர் எல்2, 20 பேர் எல்3, அதே 2019-2020-ல் 11 பேர் எல்1, ஒருத்தர் எல்2, 6 பேர் எல்3, இன்னொரு 2019-2020 டெண்டரில் 12 பேர் எல்1, ஒரே தொகையை கோட் செய்தது 12 பேர். எல்2-வில் ஒன்று, எல்3-ல் 4 பேர், 2020-2021ல் 33 பேர் பங்கேற்றதில், 11 பேர் எல்1 தொகையை மேட்ச் பண்ணி கோட் பண்ணிருக்காங்க. 15 பேர் எல்2 தொகையை மேட்ச் செய்து ஒரே தொகையை கோட் செய்திருந்தனர்.
எல்3-ல் ஒருவர் செய்து இருந்தார். இப்படி முறையாக டெண்டர் போடும் போது, 35 பேர், 40 பேர் இருக்கும் போது, குறிப்பிட்ட சிலர் வந்து எல்-1 பிரைஸ்க்கு மேட்ச் ஆகும் வகையில் இருப்பார்கள். பொதுவாக, மின்வாரியம் சார்பில் எல்1 விலையில் யார் மேட்ச் பண்ணி கொடுக்குறாங்களோ, அவங்களுக்கு அந்த டெண்டர் பிரிச்சு கொடுப்பாங்க. இது 1987-ல் இருந்து இருக்கக்கூடிய நடைமுறை. இந்த நடைமுறைகள் தான் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். மேலும், டெண்டர் குறித்து ஆய்வு செய்ய சீனியர் அதிகாரிகளுடன் கூடிய 3 கமிட்டி உள்ளது. இந்த கமிட்டி தான் டெண்டரை இறுதி செய்து ஆர்டர்கான உத்தரவை பிறப்பிக்கின்றனர்.
டெண்டரை பொறுத்தவரைக்கும், டிரான்ஸ்பார்மர் கொள்முதல் பொறுத்தவரைக்கும், கடந்த காலங்களில் என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ, அதே நடைமுறைகள்தான் இப்போதும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆட்சி மாறி இருந்தாலும் கூட அப்போதும் அதே காலத்தில் இந்த நடைமுறைகள் தான் பின்பற்றப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், சம்மந்தப்பட்ட ஒரு அமைப்பு வந்து தாக்கல் செய்த வழக்கில், கடந்த 4 வருடங்களில் தவறு நடந்தது போல பிரித்து எடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு என உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது.
டெண்டர் முறையாக மூன்று குழுக்கள் பரிசீலித்து, இறுதி முடிவெடுத்து தான் அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. எந்த இடங்களிலும் அரசிற்கோ, மின்வாரியத்திற்கோ ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை. மேலும், சிபிஐ விசாரணை நியாயமா நடக்குமா? நடக்கலையான்னு என்பது விசாரணை ஆரம்பித்த பிறகு தான் தெரியும். அதிமுக வழக்கறிஞர்கள் கூட இதுல உள்ள வந்து இருக்காங்க. அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி மேல வழக்கு போட்ட போது நீதிமன்றம் சிபிஐ விசாரணை என கூறிய போது, உச்ச நீதிமன்றம் சென்று தடையாணை வாங்கினார்கள். இதெல்லாம் கடந்த காலங்களில் இருக்கக்கூடிய வரலாறுகள். அதெல்லாம் மறைத்து இன்னைக்கு இந்த வழக்குல தங்களையும் அதிமுக இணைத்து உள்ளனர். இதுல நான் யாரையும் சரி, தவறு என சொல்லவில்லை. மின்வாரிய நடைமுறைகள் தான் பின்பற்றப்படுகிறது. மேலும், சிபிஐ விசாரணை குறித்து, முழு நீதிமன்ற உத்தரவு வெளியாகிய பின்னர் சட்ட ஆலோசனையின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
