×

திருவள்ளூர் மாவட்டத்தில் வெப்பத்தில் இருந்து தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பது எப்படி: துணை இயக்குனர் விளக்கம்

திருவள்ளூர்: தோட்டக்கலை பயிர்களுக்கென தனிச்சிறப்பு பெற்ற மாவட்டம் திருவள்ளூர். 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா, கொய்யா, வாழை, தர்பூசணி, முலாம்பழம், கத்திரி, வெண்டை, தென்னை, மல்லிகை, சம்பங்கி மற்றும் இன்னும் பல்வேறு தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது அதிகரித்து வரும் வெப்பத்திலிருந்து தோட்டக்கலை பயிர்களை பாதுகாத்து கொள்வதும் விளைச்சல் பாதிப்படையாமல் தற்காத்து கொள்வதும் நல்லது.

இந்நிலையில் நீர் பாசனம் செய்ய சொட்டுநீர் பாசனம் அமைத்தல் நல்லது, களைக்கட்டுப்பாடு செய்ய பாலித்தீன் மூடாக்கு பயன்படுத்தி காய்கறிகள் மற்றும் மலர்பயிர்களுக்கு தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்தலாம். தண்ணீர் பாய்ச்சுதல் அதிகாலை அல்லது அந்திமாலை நேரங்களில் பாய்ச்சுதல் நீர் ஆவியாதலைக் குறைக்கும், பல்லாண்டு பயிர்களுக்கு தென்னை நாரக்கழிவு அல்லது இலை தழைகளை கொண்டு மூடாக்குபோடுதல் நல்லது அல்லது களை பாய்களை பயன்படுத்தி மூடாக்கு போடலாம். அதிக வறட்சி நிலவும்போது பொட்டாசியம் குனோரைடு அரை சதவிகிதம் கரைசலை காலை அல்லது மாலை வேளைகளில் தெளிப்பது நீர் இலைகள் மூலம் ஆவியாதலை தடுக்கும்.

களை செடிகள் அதிகமாக தென்படும்போது அதை அகற்றி மூடாக்காக போட்டு நீர் வீணாவதை தடுக்கலாம். மா, எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா போன்ற பயிர்களுக்கும், காய்கறி பயிர்களுக்கும் அதிகாலை அல்லது மாலை நேரங்களில் சுத்தமானநீரை தெளித்து விடுவதன் மூலம் வெப்பத்தை குறைத்து மலர்கள், பிஞ்சுகள் உதிர்வதை தடுக்கலாம். 5 முதல் 6 மாதங்கள் வளரும் காய்கறி பயிர்களின் பரப்பை குறைத்து 2 முதல் 3 மாதங்களில் முடியும் காய்கறிகளை அதிகளவு பயிரிடலாம்.
2026-27ம் ஆண்டிற்கான தோட்cடக்கலை திட்டங்களை பெற அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலு வலகங்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறுமாறு தோட்டக்கலை துணை இயக்குநர் ஆர்.குமரவேல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திருவள்ளூர் கலெக்டர் மு.பிரதாப் உத்தரவின்பேரில், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ஆர்.குமரவேல், திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் ஊராட்சியில் உள்ள விவசாயி பார்த்தசாரதியின் மா தோட்டத்தை ஆய்வு செய்து, வறட்சியிலிருந்து பயிர்களை பாதுகாப்பது குறித்தும், ஆ.கே.பேட்டை ராஜாநகரம் விவசாயி ஏழுமலையிடம் கத்தரிக்காய் தோட்டத்தில் காய்கறி பயிர்களை அதிக வெப்பம் மற்றும் வறட்சியிலிருந்து பாதுகாத்தல் குறித்தும் ஆலோசனை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags : Tiruvallur ,
× RELATED வீடுகள் – விவசாயம் உள்ளிட்ட இலவச...