×

காலாவதியான மருந்து பாட்டில்கள் வீச்சு வேலூரில் சாலையோரம்

வேலூர், ஏப்.30: வேலூரில் சாலையோரத்தில் காலாவதியான அரசு மருத்துவமனை மருந்து பாட்டியல்கள் வீசப்பட்டுள்ளன. வேலூர் தொரப்பாடி ஆண்கள் சிறை பின்புறம் சித்தேரி செல்லும் சாலைேயாரத்தில் அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் அரசின் முத்திரையுடன் கூடிய மருந்துகள் வீசப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக பாரசிட்டாமால் பீடியாட்ரிக் சிரப், கோ-ட்ரிமாக்ஸஸோல் ஓரல் சஸ்பென்ஷன் ஆகிய பாட்டில் மருத்துகள் உள்ளது. காலாவதியான மருந்து பாட்டில்களை குப்பை அள்ளும் சுகாதாரப் பணியாளர்கள், குழந்தைகளின் கைகளில் கிடைக்க வாய்ப்புண்டு. மேலும் கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிவதால், இந்த மருந்துகளை அவை சாப்பிடவும் வாய்ப்புள்ளது. இதனால் அனைவருக்குமே ஆபத்து நிச்சயம். அதோடு கள்ளச் சந்தையில் விற்கும் அபாயமும் உண்டு. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வீசிய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதோடு, மருந்துகளை அகற்றவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Vellore ,Chitheri ,Vellore Thorappadi ,Paracetamol Pediatric… ,
× RELATED வேலூர் வாக்கு எண்ணும் மையத்தில் தேன்...