×

ஆம்னி சொகுசு பஸ் மோதியதில் நடுரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து மாதுளை பழங்கள் சாலை முழுவதும் சிதறியது வேலூர் ரங்காபுரம் பஸ் டிப்போ எதிரே

வேலூர், ஏப்.29: வேலூர் ரங்காபுரம் பஸ் டிப்போ எதிரே ஆம்னி சொகுசு பஸ் லாரி மீது மோதியதால் மாதுளை பழங்கள் சாலை முழுவதும் சிதறியது. மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து மாதுளை பழங்களை ஏற்றிக் கொண்டு லாரி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நேற்றுமுன்தினம் இரவு புறப்பட்டது. அதேபோல் பெங்களூரில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் ஆம்னி சொகுசு பஸ் புறப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணியளவில் ஆம்னி பஸ் வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது மாதுளை பழம் ஏற்றி சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இதில் எதிர்பாராதவிதமாக சொகுசு பஸ் லாரி மீது மோதி உள்ளது. இதில் நிலைத்தடுமாறி லாரி தலைகீழாக சாலையில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் டிரைவர் அதிஷ்டவசமாக உயர் தப்பினார். மேலும் மாதுளை பழங்கள் சாலை முழுவதும் சிதறியது. பஸ்சின் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கியது. ஆனால் பஸ்சில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்தில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் மற்றும் லாரியை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பயணிகளை வேறு ஒரு ஆம்னி பஸ் வரவழைக்கப்பட்டு அனுப்பி வைத்தனர். அதேபோல் வேறு லாரியில் மாதுளை பழங்களை ஏற்றிக்கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அதிகாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : luxury ,Vellore ,Rangapuram ,Vellore Rangapuram ,Maharashtra ,Chennai's Koyambedu market ,
× RELATED வேலூர் ஆப்காவில் கேரள சிறைத்துறை...