மும்பை: ஈரான்-அமெரிக்கா இடையிலான போர் நி றுத்தம் தொடரும் என்று எதிர்பார்ப்பில் இந்திய பங்குச்சந்தைகள் மீட்சியடைந்துள்ளது. நேற்று 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்திருந்த சென்செக்ஸ் இன்று 990 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 300 புள்ளிகள் உயர்ந்து 24,296 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 993 புள்ளிகள் உயர்ந்து 77,880 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. பங்கு விலைகள் அதிகரிப்பால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.7 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது.
