சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனை!

சென்னை: தங்கத்தின் மீதான ஆர்வம் மத்திய வங்கிகள் முதல் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் வரை அதிகரித்துக் கொண்டே போகிறது. பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுவதால், தங்கத்தின் விலை தினந்தோறும் புதிய புதிய உச்சம் தொட்டு வருகிறது.

அதிலும் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் பவுனுக்கு ரூ.65 ஆயிரம் வரை அதிகரித்து நகைபிரியர்களை தலை சுற்ற வைத்துள்ளது. டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்க மத்திய வங்கிகள் தங்கத்தை டன் கணக்கில் வாங்கி குவித்ததால் திடீரென தங்கம் விலையானது பல மடங்கு அதிகரித்தது. மேலும் ஈரான்- அமெரிக்க போராலும் ஒரு பக்கம் தங்கம் விலையானது உயர்ந்து வருகிறது.

இதையடுத்து கடந்த 24ம்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,100க்கும் பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,12,800க்கும் விற்றது. 25ம் தேதி கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.14,200க்கும் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,13,600க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.14,230க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,13,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: