×

சந்தன கடத்தல் வீரப்பன் படத்துடன் “பாசத்துக்கு பஞ்சமில்லை, பஞ்சாயத்துக்கு பயமில்லை” என டிஜிட்டல் போர்டு வைத்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஓவரூர் கிராமம் வெள்ளகுளத்தெரு மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் வெள்ளங்கால் காளியமான் கோவில் விழாவுக்காக பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த உறுப்பினர் வெள்ளங்கால் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சின்னமுத்து(36) என்பவர் ஒரு டிஜிட்டல் போர்டு வைத்திருந்தார்.

அந்த போர்டில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் படம் போட்டு “பாசத்துக்கு பஞ்சமில்லை, பஞ்சாயத்துக்கு பயமில்லை” என வாசகம் போடப்பட்டு இருந்தது. இதனால் கிராமத்தில் அதிர்ப்தியும் பரபரப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து எடையூர் சப்.இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட டிஜிட்டல் போர்டை அகற்றியதுடன் சம்பவ இடத்தில் அனுமதியின்றி விளம்பர போர்டு வைத்ததாக சின்னமுத்து மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Subramanian Son Sinnamuthu ,Batali People's Party ,Valangal Kaliaman Temple Ceremony ,Velakulatheru Maryamman Temple ,Muthuppettai ,Overur Village ,Thiruvaroor District ,
× RELATED விஐடி பி.டெக். மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு தொடக்கம்!