- கந்தரவக்கோட்டை
- கந்தரவகோட்டை
- கடுனவல்
- சுந்தம்பட்டி
- மாதங்கல்
- அகாச்சிபட்டி
- சிவந்தன்பட்டி
- கல்லக் கோட்டை
- மோகனூர்
- பெரியகோட்டை
- வீரடிப்பட்டி
- கந்தர்வகோட்டை
*சித்திரைமாதம் ஏற்ற பருவம்
கந்தரவக்கோட்டை : கந்தரவக்கோட்டை பகுதிகளில் சோளம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.கந்தர்வகோட்டை ஒன்றியதை சேர்ந்த காட்டுநாவல், சுந்தம்பட்டி, மட்டாங்கால், அக்கச்சிபட்டி, சிவந்தான்பட்டி, கல்லாக் கோட்டை, மோகனூர், பெரியகோட்டை, வீரடிப்பட்டி மற்றும் பல கிராம விவசாயிகள் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சோளம் பயிர் சாகுபடி செய்து வருகிறார்கள்.
சோளம் சாகுபடியில் பெரும்பாலும் நாட்டுச்சோளம் ரகத்தையே விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தவகை சோளம் சுமார் 4 மீட்டர் உயரம் வளரக்கூடியது. சித்திரை, மாசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் சோளம் சாகுடிக்கு ஏற்ற பருவமகும்.
குறிப்பாக சித்திரை மாதத்தில் மேற்கில் இருந்து கிழக்குநோக்கி காற்றடிக்கும்போது அயல் மரகந்த சேர்க்கை ஏற்படுவதால் மகசூல் கூடுதலாக வாய்ப்புண்டு. ஆகவே சித்திரை மாத பட்டமே மிகச்சிறந்ததாக அமைகிறது. ஏக்கருக்கு 7 கிலோ விதைசோளம் தேவைப்படுகிறது.சோளம் சாகுபடியின் போது விதைநேர்த்திசெய்து பயிரிட்டால் நோய் தாக்கத்தில் இருந்து பயிர்களை பாதுகாப்பதோடு நல்ல மகசூலும் அடையலாம்.
இதில் 200 கிராம் அசோஸ்பைரில்லம், 200 கிராம் பாஸ்போபாக்டீரியா, நன்றாக ஆரிய அரிசி கஞ்சி 200 மில்லியில் சோள விதைகளை கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். பின்னர் 24 மணிநேரத்திற்குள் விதை நேர்த்தி செய்யப்பட்ட சோளம் விதைக்கவேண்டும்.
இதேபோல் உழவுப்பணிகளை செய்யப்பட்டுள்ள வயலில் மண்ணில் கட்டிகள், கல், பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாமல் மண்ணை பொதுபொதுப்புடன் வைத்திருக்கவேண்டும். கடைசி உழவின்போது 5 டன் மக்கிய தொழு உரங்களை நிலத்தில் பரப்பிவிட்டு உழவு பணிகளை செய்ய வேண்டும். அதன் பிறகு கடைசி உழவு பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
இதேபோல் சோளவிதைகளைபசுமாட்டு கோமியத்தில் அரைமணிநேரம் ஊறவைத்து, பின்னர்வெயிலில் உலர்த்தி விதைத்தால், வறட்சியை தாங்கி வளர்வதோடு கரிப்பூட்டு நோயை கட்டுப்படுத்தலாம்.
சோளம் சாகுபடியின் போது ஏக்கருக்கு சிறுதானிய நுண்ணுரம் 5 கிலோவுடன் 20 கிலோ மணலுடன் கலந்துவயலில் ஈரம் இருக்கும் போது தூவவேண்டும். இதேபோல் சாகுபடிசெய்யப்பட்டுள்ள வயலில் 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.மேலும் ஆட்கள் மூலம் களையை கட்டுப்படுத்தலாம். இதில் மைக்கருது என்ற ஒருவகையான நோய் தாக்கம் ஏற்படலாம். இதுசோளக்கதிரில் பவுடர் போல் கருப்பாக காணப்படும்.
இதை மழைக்காலங்களில் எதிரே வராததுபோல் பயிர் நடவினை மாற்றியமைத்தால் மைக் கருது என்ற நோயைகட்டுப்படுத்தலாம். தற்போது சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்களது வயல்களில் களை எடுக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது:
இப்பகுதி வானம் பார்த்த பூமியாக இருப்பதால் ஆழ்துளை கிணற்றில் மூலம் நீர் பாய்ச்சும் நிலை இருப்பதாகவும் மின்சார வாரியம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் மின்பாதையில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்கள். மேலும் சோளதை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.
