×

நீலகிரி மாவட்டத்தில் பிளம்ஸ், பீச்சீஸ் பழ சீசன் துவக்கம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் மிகவும் தாமதாமாக பிளம்ஸ் மற்றும் பீச்சீஸ் பழ சீசன் துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பேரிக்காய், ஆரஞ்சு, பிளம்ஸ், பீச்சீஸ் போன்ற பழங்கள் மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.

அதிலும், ஆண்டு தோறும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை சுவை மிக்க பீச்சீஸ் மற்றும் பிளம்ஸ் பழங்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் அதிகளவு அறுவடை செய்யப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். கிலோ ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படும்.

பொதுவாக, இந்த பழங்கள் மார்ச் மாதம் துவக்கம் முதல் விற்பனைக்கு வரும். ஆனால், இம்முறை மார்ச் மாதம் முழுவதும் இந்த பழங்களின் காய்ப்பு இல்லாமல் இருந்தது. தற்போது இந்த பழ சீசனும் துவங்கி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்துள்ளன. குறைந்த அளவு வந்துள்ள இந்த பழங்களை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாங்கி செல்கின்றனர்.

Tags : Nilgiris district ,Nilgiris ,
× RELATED பைக்காரா, பார்சன்ஸ்வேலியில் 13வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீ