×

தமிழக கவர்னர் ஊட்டிக்கு நாளை செல்கிறார்

ஊட்டி: மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை கட்டுப்பாட்டில் ஊட்டி அருகே லவ்டேல் பகுதியில் லாரன்ஸ் பள்ளி உள்ளது. இங்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் 168வது நிறுவனர் நாள் விழா இன்று (28ம் தேதி) துவங்கி 3 நாட்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் வரும் 30ம் தேதி நடக்கிறது. இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழக கவர்னர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேக்கர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்காக, நாளை (29ம் தேதி) சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் ஊட்டி சென்று 30ம் தேதி நடக்கும் பள்ளி விழாவில் பங்கேற்கிறார்.

Tags : Governor ,Tamil Nadu ,Ooty ,Central Human Resources Development Department ,Lawrence School ,Lovedale ,168th Founder's Day ceremony ,
× RELATED மராட்டிய மாநிலம் புனே ரயில்...