×

பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை ஜூலை 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: 2027ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை ஜூலை 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும் படி அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கமாகும். கலை, இலக்கியம், கல்வி , விளையாட்டு மருத்துவம், சமூகப் பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப்பணி, வர்த்தகம் மற்றும் சிறந்த சாதனை அல்லது சேவைகளை ஆற்றியவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் 2027ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளையும், சிபாரிசுகளையும் சமர்ப்பிக்கும்படி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற ஜூலை மாதம் 31ம் தேதிக்குள் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிந்துரைகள் அனைத்தும் ராஷ்டிரிய புரஸ்கார் இணையதளம் (https.//awards.gov.in) வாயிலாக இணையவழியில் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Padma Awards ,Union Government ,New Delhi ,Padma Vibhushan ,Padma ,Republic Day ,
× RELATED மராட்டிய மாநிலம் புனே ரயில்...