×

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: நிலச்சரிவு மற்றும் பாறைகள் சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை!

டோக்கியோ: ஜப்பானின் வடக்குத் தீவான ஹோக்கைடோவில் இன்று(ஏப்ரல் 27) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அமெரிக்க மற்றும் ஜப்பானிய வானிலை ஆய்வு மையங்களின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2ஆகப் பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 5:23 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம், ஹோக்கைடோவின் தெற்குப் பகுதியில் சுமார் 83 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது.

ஆரம்பத்தில் இதன் தீவிரம் 6.1 என மதிப்பிடப்பட்டாலும், பின்னர் அது 6.2 ஆக உயர்த்தப்பட்டது. தற்போதைய நிலையில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்றாலும், வரும் வாரங்களில் இதே போன்ற தீவிரத்துடன் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால், பெரிய அளவிலான உயிர்ச் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்பட வாய்ப்பில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்த பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படவும், மலைப்பகுதிகளில் இருந்து பாறைகள் உருண்டு விழவும் அதிக வாய்ப்புள்ளதாக ஜப்பானிய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags : Tokyo ,Japan ,island ,Hokkaido ,US ,Japanese Meteorological Centers ,
× RELATED கொடைக்கானலில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி