- முதல் அமைச்சர்
- பாட்டி தியாகராய்யார்
- சென்னை
- பிட்டி தியாகராயர்
- எல். ஏ கே. ஸ்டாலின் எக்ஸ்
- வெள்ளை
- பீட்டி தியாகரே
- நகராட்சி மன்றம்
சென்னை: நீதிகட்சியின் நிறுவனர்களில் ஒருவரான பிட்டி தியாகராயரின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
“ஏப்ரல் 27: நம் வேரான நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்தநாள்.
மாநகராட்சி மன்றத் தலைமைப் பொறுப்பில் இருந்து சென்னையின் தொடக்கக்கால வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர். எவர் மீதும் வெறுப்புணர்வைக் காட்டாத பண்பிற் சிறந்தவர்.
பார்ப்பனரல்லாதாரின் உரிமைகள், கல்வி வளர்ச்சி ஆகியவற்றுக்காகத் தியாகராயர் ஆற்றிய பணிகள்தான் இன்றும் நம்மை இயக்கும் திராவிடமாடல். அதன் பயணம் மேலும் உறுதியோடு தொடரும்!” என பதிவிட்டுள்ளார்.
