×

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,13,840க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,13,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.14,230க்கும், ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.270க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அட்சய திருதியை கடந்த 19ம் தேதி கொண்டாடப்பட்டது. மறுநாள் முதல் தங்கம் விலை குறைய தொடங்கியது. 20ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 14400க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 21ம் தேதி தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. 22ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது.

அதன் பிறகு 23ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.720 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13,280க்கு விற்பனையானது. 24ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.14100க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12800க்கும் விற்கப்பட்டது.

வார இறுதி நாளான 25ம் தேதி தங்கம் விலையில் திடீர் மாற்றம் காணப்பட்டது. அதாவது நேற்று முன்தினம் தங்கம் விலை அதிகரித்ததை காண முடிந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14200க்கும், பவுனுக்கு ரூ.800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13,600க்கு விற்பனையானது.

இதேபோல நேற்று வெள்ளி விலையும் அதிகரித்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.270க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் விற்பனையானது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையானது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை கூடியது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,13,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.14,230க்கும், ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.270க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,Atasaya Thiruthiyai ,
× RELATED வெளியூரில் இருந்து சென்னை வரும்...