டெல்ல: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும். தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in -ல் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதியை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். நீட் நுழைவுத் தேர்வு மே 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதற்காக 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்
